தூது

 நான் என்னோட பக்கத்து வீட்டில இருக்கிற மல்லிகை பூ வாசத்தை அனுப்பி வச்சேன் உன் நலம் விசாரிச்சுட்டு வர...

அது உன்னோட நலம் விசாரிச்சுட்டு வந்து சொல்லுச்சு உன் பொண்டாட்டிய பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது நான் தனியா இருந்தா எனக்கு மரியாதை இல்லை அவ என்ன தலையில சூடிக் கொள்வதால் மட்டுமே என்று...

அவள் இதழ்களை தடவி பார்த்தேன் என் இதழ்களை விட இலகுவான இதழ் கொண்டவள் என்றது...

என்னை தினமும் பறித்து வாசம் பிடிக்கும் உனக்கு சற்று குறைவாகத்தான் இருக்கும் அவளின் வாசம் தெரிந்ததால் என்றது...

நான் ஏன் இவ்வளவு பெரிய பூவாக பிறந்தேன் என்று ஏக்கத்தை சொல்லியது அவள் கண்கள் தூசி அளவு இருந்திருந்தால் அவள் கண்ணில் சென்று சற்று குடியிருந்து வந்திருப்பேன் என்றது…

Comments

Popular Posts