மகளே...மகளே...
என் மகளே...
என் அருகே வா
எக்கி பிடி
ஏறி முத்தமிடு
மெதுவாக கடி
சுட்டுவிரல் பிடித்து நட
சைக்கிளில் சுற்ற அடம்பிடி
தோன்றும் அனைத்தையும் கேள்
கேள்வி கேட்டு கிரங்க வை
தினம் தினம் என்னை கொன்றுவிடு
திகட்டாமல் எதையும் தின்று விடு
தொடரட்டும் உன் தேடல்
என்றும் என்றென்றும் என்னுடன்...
Comments
Post a Comment